ஆவடி விமானப்படை நிலையத்திற்கு 'யூனிட் சைட்டேஷன்' விருது வழங்கி கௌரவம்

ஆவடி விமானப்படை நிலையத்தின் செயல்பாட்டுத் திறன், தளவாட பராமரிப்பு மற்றும் வீரர்களுக்கான பயிற்சி முறைகளை பாராட்டி, ஆளுநரின் பாராட்டுப் பத்திரம் மற்றும் 'யூனிட் சைட்டேஷன்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஆவடி நிலையத்தின் கமாண்டிங் அதிகாரி ஏர் கமடோர் பிரதீப் சர்மா பெற்றுக்கொண்டார். சென்னையில் உள்ள தேசிய பாதுகாப்பு படையின் 27வது சிறப்பு கூட்டு குழுமத்திற்கும் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆவடி விமானப்படை குடும்ப நல சங்கத்தின் தலைவி ரச்னா சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕