தானியங்கி மின் கட்டண வசதி: தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு

மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த தவறுபவர்களுக்காக, தமிழக மின்சார வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpdcl.org-இல் 'EB Auto Pay' என்ற புதிய தானியங்கி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை பெற விரும்பும் தாழ்வழுத்த பிரிவு மின் நுகர்வோர்கள், இணையதளத்தில் தங்கள் மின் இணைப்பு எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து இணைத்து கொள்ளலாம். இதன் மூலம், இனிவரும் காலங்களில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட நாளில் இருந்து 10-ஆவது நாளில், நுகர்வோரின் மின் கட்டணத் தொகை அவர்களது வங்கி கணக்கில் இருந்து தானாகவே எடுத்து கொள்ளப்படும் என்பதால் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை எளிய முறையில் தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி