தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக வரும் 23-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப் போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. 2013-ல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.45 ஆகவும், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.20 ஆகவும் உயர்த்த வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.