திருப்பூர் தாராபுரத்தில் ஆட்டோ சவாரிக்குரிய கட்டணம் கேட்ட ஓட்டுநரின் கழுத்தை அறுத்துவிட்டுப் புலம்பெயர் தொழிலாளர்கள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் ஜெபராஜ் (48) கேட்ட பணத்திற்குச் சம்மதித்து ஏறியவர்கள், இறங்கும்போது இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். படுகாயமடைந்த ஜெபராஜ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.