வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதிகாரிகளே முழு பொறுப்பு: பசுமை தீர்ப்பாயம்

பருவமழை காலத்தில் வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பேற்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. அங்குள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்ட தீர்ப்பாயம், அரசு மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை என்று காரசாரமாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், வெள்ள பாதிப்பிற்கு பின் நிவாரண நிதி கோருவதை தவிர்த்து, ஏரிகளை முழுமையாக மீட்பதில் புதிய அரசு கவனம் செலுத்தி வரலாற்றில் இடம்பிடிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி