டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.