கனரக வாகனங்களின் இருப்பிடத்தை கண்டறிய உதவும் விஎல்டிடி (VLTD) கருவிகளை வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த நிறுவனத்திடமிருந்தும் வாங்கி கொள்ளலாம் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற முந்தைய நிர்பந்தம் நீக்கப்பட்டதால், இக்கருவியின் விலை ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கணிசமாக குறைந்துள்ளதால் வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.