தெற்கு ரயில்வே, ரயில் பயணிகளின் உடைமைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. முதல் ஏசி வகுப்பில் 70 கிலோ, இரண்டாம் ஏசி வகுப்பில் 50 கிலோ, மூன்றாம் ஏசி மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு அமரும் பெட்டியில் 35 கிலோ என ஒவ்வொரு வகுப்புக்கும் இலவச உடைமைகள் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது. பயணிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.