ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்புறம் சிவப்புப் பட்டை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இத்தகைய மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்கவே இந்த சிவப்பு பட்டை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், போலி மருந்துகள் புழக்கத்தை தடுக்க மருந்தகங்களில் ஒட்டப்பட்டுள்ள QR கோடு மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.