நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு முழுவதும் வேலை செய்து, பகலில் களைப்பாக தூங்கிவிடுவதால் உடலுக்கு ஒரு இயக்கம் இருக்காது. எனவே உடற்பயிற்சி செய்வது அவசியம். அதேபோல், நைட் ஷிஃப்ட் பணிபுரிவர்களுக்கு உடலில் ஹார்மோன் சமநிலை இருக்காது. இதனால் அடிக்கடி தலை, கால் மற்றும் முகத்திற்கு மசாஜ் செய்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.