வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இன்று முதல் FAStag-ல் புதிய விதிமுறைகள்

FAStag பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, குறைந்த இருப்பு, தடைசெய்யப்பட்ட டேக் வைத்துள்ள பயனர்களுக்கு இனி கூடுதல் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று முதல் (பிப். 17) அமலுக்கு வந்துள்ளது. பயணத்திற்கு முன் பாஸ்டேக் வாலெட்டில் போதுமான இருப்பை பயனாளர்கள் உறுதி செய்துகொள்வது நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் சுங்கவரி பரிவர்த்தனையின் செயலாக்கம் நடைபெற்றால், FAStag பயனாளர்களுக்கு கூடுதல் கட்டணம் அபராதமாக விதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி