அனைத்து வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் நுகர்வோரும் தங்களது ஆதார் பயோமெட்ரிக் e-KYC சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. நுகர்வோர் இப்போது தங்களின் எண்ணெய் நிறுவன செயலிகள் மற்றும் Aadhaar FaceRD செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே எளிதாக இந்த சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை pmuy.gov.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.