சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் தொழில்நுட்பக்கோளாறு: மின்னணு பயணச்சீட்டுகள் வழங்குவதில் தற்காலிகமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நடத்துநர்கள் காகித பயணச்சீட்டுகள் வழங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது எனவும் 'சென்னை ஒன்' செயலி தற்காலிகமாகச் செயல்படாது எனவும் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.