பெற்றோர் கண் முன்னே குழந்தையை கடத்த முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரம் ஐயப்பன் கோயில் பகுதி அருகே சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் சித்தார்த் என்ற மகன் உள்ளார். இன்று காலை சித்தார்த் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென சிறுவனைப் பிடித்து வாயை பொத்தியபடி அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் தர்ம அடி குடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெற்றோர் கண் முன்னே சிறுவனை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி