தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “சாத்தான்குளம் அருகே முதலூரில் பிப். 19ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவன் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவன் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்குப் பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.