நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதி விசாரணை கோரி போராடிய இளைஞர்கள் மீது டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது அரச வன்முறையை ஏவுவது ஏற்க முடியாது என அவர் கூறினார். கரப்பான்பூச்சி அமைப்பினர் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சீமான், நாடாளுமன்றம் நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.