அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் - பினராயி விஜயன் கண்டனம்

கேரளாவின் கண்ணூரில் இன்று (பிப்., 25) இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தின் போது அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்தார். திருவனந்தபுரம் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு அமைச்சர் சென்றபோது, ​​காங்கிரஸ் தொண்டர்கள் அவரது காரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கழுத்து, கையில் காயமடைந்த அமைச்சர், கண்ணூர் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வீணா ஜார்ஜை முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

நன்றி: ஏசியாநெட்

தொடர்புடைய செய்தி