சி.மிருதுளா மீதான தாக்குதல்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான சி.மிருதுளாவை கடந்த 10 நாட்களாக  சமூக வலைதளங்களில் ஆணாதிக்க, சாதிய வன்மங்களுடன் தாக்கி வருவதாக சிபிஎம் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இது கருத்துரிமையை ஒடுக்கும் செயல் என்றும், தனிநபர்கள் மீதான ஆபாச சித்தரிப்புகள் மற்றும் வன்ம வார்த்தைகளைப் பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕