மீண்டும் தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி தர இந்திய படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். இந்தியா - பாக்., இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் இன்று மாலை மேற்கொள்ளப்பட்டது. இது நடந்து சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் எல்லையில் அத்துமீறி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திவருகிறது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மிஸ்ரி, இந்த ஊடுருவல் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி