முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அதிஷி இன்று (பிப்.,9) தனது பதவியை ராஜினாமா செய்தார். காலை 11 மணிக்கு, அவர் ராஜ்பவனில் லெப்டினன்ட் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களில் 48 இடங்களை வென்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டாவது நாளான இன்று, அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி