ரூ.10,000 ஆக உயரும் அடல் பென்ஷன் யோஜனா முதியோர் ஓய்வூதியம்?

முறைசாராத் தொழிலாளர்களுக்கான 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தின் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போதைய பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை விரைவில் 10 கோடியைத் தாண்டும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின் (PFRDA) தலைவர் எஸ். ராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி