உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கான மொத்த நிதியையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், 'திமுக அரசை பொறுத்தவரை சொன்னதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்; நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ரத்தக் கண்ணீர் வடித்தனர்' என தெரிவித்தார்.
நன்றி: News18