மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த உதவி ஜெயிலருக்கு அடி, உதை

மதுரை சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, பைபாஸ் சாலையில் உள்ள முன்னாள் சிறைவாசியின் ஓட்டலுக்கு வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் உணவகத்திற்கு சென்ற பாலகுருசாமி, சிறைவாசியின் மகளிடம் பேச துவங்கியுள்ளார். இன்று ஆரப்பாளையம் பகுதியில் மாணவியிடம் பாலகுருசாமி பேசிக் கொண்டிருந்ததை மாணவியின் உறவினர்கள் கவனித்துள்ளனர். பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சாலையிலே வைத்து அடித்துள்ளார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி