கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ரெய்னாவின் சொத்துக்கள் முடக்கம்

ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில், ஷிகர் தவானுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் அடங்கும்.

தொடர்புடைய செய்தி