புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்.9) 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 918 சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய 45 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நன்றி:Polimer