ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்த ரந்தீர் சிங் (79) காலமானார். வயது முதிர்வு காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனது வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த ரந்தீர் சிங் நேற்று (மே.27) காலமானார். அவரது மறைவுக்கு, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்பட பல்வேறு விளையாட்டு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.