மத்திய பிரதேசத்தின் பனா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த, ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானை வத்சலா, உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. 100 வயதான இந்த யானையை காண ஏராளமான பொதுமக்கள் சரணாலயத்திற்கு வந்து சென்றனர். சில நாட்களுக்கு முன்னர் கால் நகத்தில் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த யானை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
நன்றி: புதிய தலைமுறை