ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவுதி அரேபியா ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நான்காம் செட் ஏலத்தில், இந்திய அணியின் சுழற்பந்து வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு எடுத்தது. இதன் மூலம் அஸ்வின் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.