தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரில், கடந்த ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், ரசாயனங்கள் தடவப்பட்ட துண்டுகளைப் பயன்படுத்தி பந்தைச் சேதப்படுத்தியதாக மதுரை அணி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க மதுரை அணிக்கு TNPL தரப்பு உத்தரவிட்டுள்ளது.