கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம் என்று கூறி தகவல் பகிரப்படுகிறது. இதுபோன்று எந்த விண்ணப்பத்தையும் வெளியிடவில்லை என அரசு தெரிவித்துள்ளது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்து 30 நாட்களுக்குள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான ஆதாரங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் மூலம் பதிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.