தவெகவில் இணையும் கலைஞர் பேத்தி?.. மதுரை மாநகராட்சியை கைப்பற்ற திட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, முதலமைச்சர் விஜய்யை அண்மையில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கயல்விழி கூறினாலும், உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து மதுரை மேயர் பதவியை அவர் குறி வைத்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அழகிரியின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவும் மனக்கசப்பு, அவரது குடும்பத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, மகனுக்கு சீட் கிடைக்காத ஏமாற்றம் போன்ற காரணங்களால் கயல்விழியின் இந்த புதிய அரசியல் நகர்வு இருக்கலாம் எனப் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி