செயற்கை நுண்ணறிவு மாநாடு: டெல்லியில் நாளை தொடக்கம்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்தவும், அதன் செயல்பாட்டை பரவலாக்கவும் உலக அளவில் நடைபெறும் 4-வது உச்சி மாநாட்டின் தொடக்க விழா நாளை (பிப்., 19) டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முன்னோட்டமாக பிரதமர் மோடி கடந்த 16ஆம் தேதி கண்காட்சியை தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள், 45 நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள், 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி