தர்ப்பூசணியின் செயற்கை நிறம்.. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தர்பூசணியில் செயற்கை நிறம் கலக்கப்படுவதாகப் பரவும் தவறான தகவல்களுக்கு ஆதாரமில்லை என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். தர்பூசணியின் சிவப்பு நிறம் லைகோபீன் என்ற இயற்கை நிறமூலக்கூறுகளால் உருவாவது என்றும், விவசாயிகள் செயற்கை நிறங்களைக் கலப்பது நடைமுறையில் இல்லை என்றும் அவர் விளக்கினார். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அச்சமின்றி பழத்தை உண்ணலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி