நல்லகண்ணுவுக்கு கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலி செய்ய ஏற்பாடு

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். அவரது உடலைப் பார்க்க அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல், தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி