ஆரோக்யா பால் விலை உயர்வு: டீ, காபி விலையும் ஏற வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பாலின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதன்படி, அரை லிட்டர் பாக்கெட் விலை 2 ரூபாயும், ஒரு லிட்டர் விலை 3 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் விநியோகச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தனியார் நிறுவனங்களும் விலையை உயர்த்தவுள்ளதால், வரும் நாட்களில் டீ, காபி விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி