ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரம் அதிமுகவில் இணைந்தார்

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்ட முகமது அப்பாஸ், அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நேற்று (பிப்., 20) நடந்த சந்திப்பின் போது, தன்னை கட்சியில் இணைந்துக் கொண்டார். ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, புதிய கட்சியை கடந்த ஆண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி