பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த தொகை பெண் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.