மணிப்பூரின் தமன்லாங், நோனி மாவட்டங்களில் நாகா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகா ஆயுத குழுக்களின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் 22 குகி பழங்குடியின மக்கள் பலியாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள குகி-சோ கவுன்சில், இச்சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், மத்திய அரசு தலையிட்டு ஆயுத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மணிப்போர் இனமோதலை நோக்கி தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.