தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய நிர்வாக மாற்றத்தின் வெளிப்பாடாக தற்போது செயல்பட்டு வரும் தவெக அரசாங்கத்தை கூர்ந்து கவனித்து வருகிறேன் என பாஜக பிரமுகர் அர்ஜூனமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'துறை சார்ந்த அனுபவமிக்க நிர்வாகிகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி, நிர்வாக அமைப்புகளுக்குள் இருந்த துவேஷ மனப்பான்மைகளை களைந்து, மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆட்சிமுறையை உருவாக்கும் முயற்சிக்கு முதலமைச்சர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.