அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

நடிகர் அர்ஜுன் தாஸ் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளதாகவும், ஒரு நடிகையை காதலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அர்ஜுன் தாஸின் மக்கள் தொடர்பு மேலாளர் யுவராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்து பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி