அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு நடித்துள்ள 'கான் சிட்டி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடனில் தவிக்கும் நாயகனுக்குப் பணம் கொட்டும் இயந்திரம் கிடைப்பதால் ஏற்படும் திருப்பங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்திற்குச் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.