பாலியல் புகார்களுக்கு நிச்சயமாக நடவடிக்கை - ஆட்சியர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்: என்ஐடி-யில் நடைபெற்ற நிகழ்வில் ஏற்கனவே அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து கைது செய்துள்ளோம். விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராடினர். இதுகுறித்து ஏற்கனவே என்ஐடி நிர்வாகம் சார்பாக விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மாவட்ட நிர்வாகத்திற்கு பாலியல்ரீதியான புகார்கள் ஏதும் வரவில்லை. பாலியல்ரீதியான புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு வரும்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு உள்ளனர். சிசிடிவி எதும் பிரச்சனை இருந்தால் அதனை மேம்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்துவோம்.

பெண்கள் விடுதியில் ஆண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் வேலை காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்றவர்கள் செல்லும் பொழுது வார்டன் துணையோடு செல்ல வேண்டும். பெண்கள் விடுதியில் ஆண்கள் நுழையக்கூடாது. பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதனை சரி செய்வதாக நிர்வாகம் கூறியுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி