திருச்சி: பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட பெண்கள் மீட்பு

திருச்சி ராமலிங்க நகர் எழில் நகரில் பெண்களை வைத்து  பாலியல் தொழில் நடப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில் போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது  பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.  

பாலியல் தொழில் நடத்தியதாக கருமண்டபத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் இருபதாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக முஸ்தபா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி