திருச்சி: அரசு பஸ் டிரைவருக்கு தர்ம அடி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தின்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சப் ஜெயில் ரோடு வெங்காய மண்டி வழியாக பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது சாலை நடுவே வியாபாரி ஒருவர் தள்ளு வண்டியில் பூண்டு ஏற்றிக் கொண்டிருந்தார். இதை கண்ட பஸ் டிரைவர் பஸ்ஸை நிறுத்தி அவரிடம் இது குறித்து கேட்டார். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டது. வியாபாரி பஸ் டிரைவரை தாக்கினார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து இபி ரோடு உப்புளி தெருவைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி