தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31) இவர் திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் தனி வார்டில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 29ம் தேதி முகமது உசேன் தன்னை பொது வார்டுக்கு மாற்ற கோரி ஜெயில் வார்டன் மற்றும் பணியாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் முகமது உசேன் பேண்ட் நாடாவை கழற்றி அதில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை வார்டன் உள்ளிட்டோர் அவரை உடனடியாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் ஆயுள் தண்டனை கைதி முகமது உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.