திருச்சி: ஆட்டோ, பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி- பரபரப்பு வீடியோ

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் அலீமா பீவி. இவர் அய்யம்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டில் மீனைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு லால்குடிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோவை அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ருக்மணி (54 ) என்கிற பெண் ஓட்டி சென்றுள்ளார். திருச்சி நாமக்கல் சாலையில் ஏவூர் கருப்பு கோவில் அருகே ஆட்டோ சென்றபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

ஆட்டோவில் மோதிய பேருந்து சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டிய சென்ற ருக்மணி படுக்காயமடைந்தார். முசிறிஅரசு மருத்துவமனையில் ருக்மணி சேர்க்க பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி பலியானார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த அலீமாபி உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி