மண்ணச்சநல்லூர் அருகே பைக் விபத்து.. ஒருவர் பலி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு சம்பவம் நடந்த கடந்த பத்தாம் தேதி அன்று தீராம்பாளையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கவனக்குறைவாக வாகனத்தை ஒட்டி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (பிப்.21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த தங்கராசுவின் மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி