ஸ்ரீரங்கம்: ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ சித்திர வீதியில் ஹோட்டல் மற்றும் பாத்திர கடை உள்ளது நேற்று முன்தினம் (ஜனவரி 2) இரவு கடையை பூட்டிவிட்டு கடையின் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று (ஜனவரி 3) அதிகாலை மர்மநபர்கள் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணம் பொருட்களை திருடிச் சென்றனர். 

கலைவாணர் தெருவில் உள்ள சலூன் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். மேலும் மாம்பழச்சாலையில் உள்ள ஒரு கடையின் பணத்தை திருடிச் சென்றனர். இந்நிலையில் நேற்று (ஜனவரி 3) காலை கடைகளை திறக்கச் சென்ற வியாபாரிகள் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற ஐந்து கடைகளிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி