திருமணம் ஆகாத நிலையில் ஸ்ரீராம்குமார், அவரது தாயாரை கவனித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது தாயர் உயிரிழந்தார். தொடர்ந்து தனது தாயாரின் உடலை தான் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டில் ஸ்ரீராம்குமார் சடங்கு சம்பிரதாயங்கள் செய்து உள்ளார். தொடர்ந்து வீட்டை உட்புறமாக பூட்டிய ஸ்ரீராம்குமார் வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் கடந்த 10 தினங்களாக வெளியில் நடமாடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீராம் குமாரும், அவரது தாயார் உடலும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.