இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் பெரியசாமி இன்று மதியம் செல்வகுமார் தங்கி இருந்த வீட்டின் படிக்கட்டுகளில் ரத்தக்கரை இருப்பதைக் கண்டு மேலே சென்று பார்த்துள்ளார். அப்பொழுது, ரத்த வெள்ளத்தில் செல்வகுமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார், நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டதில், செல்வகுமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவரிடம் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வருவதும், மருத்துவரின் கடிதமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
மேலும் விசாரணையில் நேற்று பகலில் வீட்டிலிருந்த செல்வகுமார் பிளேடால் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு மயங்கி விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்து போனது ஆய்வில் தெரிய வந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.